கனடாவில் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டது

கனடாவில் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டது

by Staff Writer 24-03-2025 | 12:16 PM

Colombo (News1st) கனடாவின் பொதுத்தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 28 ஆம் திகதி நடைபெறுமென பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) அறிவித்தார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கனடா மீது விதித்துள்ள வரிகளை எதிர்க்கொள்வதற்கான அதிகாரத்தை கோரி பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) தேர்தலை அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதுபோன்ற முக்கியமான தருணங்களில் நாட்டை யார் வழிநடத்த வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் எனவும் மார்க் கார்னி சுட்டிக்காட்டினார்.

கனடாவின் இரண்டு முக்கிய கட்சிகளான கன்சர்வேடிவ் மற்றும் லிபரல் கட்சி ஆகியன இம்முறை தேர்தலில் போட்டியிடவுள்ளன.

கனடாவின் தற்போதைய பிரதமர் மார்க் கார்னி, கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் உள்ளிட்ட நான்கு வேட்பாளர்கள் தேர்தலில் களமிறங்குகின்றனர்.