இலங்கை - அவுஸ்திரேலியா பேச்சுவார்த்தை நாளை

இலங்கை - அவுஸ்திரேலியா இருதரப்பு பேச்சுவார்த்தை நாளை ஆரம்பம்

by Staff Writer 24-03-2025 | 5:25 PM

Colombo (News1st) இலங்கை - அவுஸ்திரேலியாவிற்கு இடையிலான ஐந்தாம் கட்ட பேச்சுவார்த்தை நாளை(25) ஆரம்பமாகவுள்ளது.

இருநாடுகளுக்கும் இடையிலான அரசியல், பொருளாதாரம், கல்வி, பாதுகாப்பு, சமுத்திர ஒத்துழைப்பு தொடர்பில் இதன்போது ஆராயப்படவுள்ளது.

இந்த பேச்சுவார்த்தை அவுஸ்திரேலியாவின் கென்பரா (Canberra) நகரில் நாளையும் நாளை மறுதினமும் நடைபெறும்.

இதற்கு இணையாக இருநாட்டு மூலோபாய சமூத்திர கலந்துரையாடலின் மூன்றாம் கட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

ஏனைய செய்திகள்