மோட்டார் சைக்கிள்களை திருடியவர் கைது

மோட்டார் சைக்கிள்களை திருடியவர் கைது

by Staff Writer 24-03-2025 | 5:17 PM

Colombo (News1st) மோட்டார் சைக்கிள்களை திருடி திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்களுக்கு பெற்றுக்கொடுத்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

குறித்த நபர் கடந்த வாரத்தில் மாத்திரம் 7 மோட்டார் சைக்கிள்களை திருடியுள்ளதாகவும் அதில் 3 மோட்டார் சைக்கிள்களை கைப்பற்றியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கம்பஹா வைத்தியசாலையின் பிரேத அறையில் கடமையாற்றும் நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.