.webp)
Colombo (News1st)இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் பதிவான 27 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில் 22 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இவற்றில் 18 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களுடன் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்கள் தொடர்புபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி 13 பேர் காயமடைந்துள்ளனர்.
இவர்களில் 08 பேர் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்களால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்துள்ளனர்.