.webp)
Colombo (News1st)தெவிநுவர - சிங்ஹாசன வீதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலை தொடர்பில் இதுவரை நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களின் பெண்ணொருவரும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் கந்தர மற்றும் தெவிநுவர பகுதிகளைச் சேர்ந்த 23 முதல் 46 வயதுக்கிடைப்பட்டவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த இரு இளைஞர்களை இலக்கு வைத்து நேற்று முன்தினம்(22) துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.