பஸ் விபத்து - 40 பேர் காயம்

2 பஸ்கள் ஒன்றுடனொன்று மோதி விபத்து - 40 பேர் காயம்

by Staff Writer 22-03-2025 | 5:24 PM

Colombo (News1st)கொழும்பு - கண்டி வீதியின் வறக்காபொல ஹெலகல பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 40 பேர் காயமடைந்துள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபையின் 2 பஸ்கள் ஒன்றுடனொன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் வறக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.