லண்டனின் ஹீத்ரோ விமான நிலையம் - வழமைக்கு

லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்தின் விமான சேவைகள் வழமைக்கு

by Staff Writer 22-03-2025 | 6:30 PM

(Colombo News1st) விமான நிலையத்திற்கு அருகில் உள்ள உப மின் நிலையமொன்றில் நேற்று (21) ஏற்பட்ட பாரிய தீப்பரவல் காரணமாக விமான நிலையத்திற்கான மின் விநியோகம் முற்றாக தடைப்பட்டிருந்தது

இதனையடுத்து விமான நிலையம் முழுமையாக மூடப்பட்டதோடு சர்வதேச அளவில் பல விமான சேவைகளுக்கு தடங்கள் ஏற்பட்டிருந்தது.

மின் விநியோகத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக சுமார்  1,351 விமான பயணங்கள் பாதிக்கப்பட்டதோடு 200,000மேற்பட்ட பயணிகள் அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர்.

லண்டனின் மேற்கு பகுதியிலுள்ள 16,300 இற்கு மேற்பட்ட வீடுகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் சுமார் 150 பேர் தீப்பரவல் ஏற்பட்ட பகுதியிலிருந்து வௌியேற்றப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் லண்டன் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.