தேசிய போதனாவியல் டிப்ளோமா தாரிகளுக்கு நியமனம்

தேசிய போதனாவியல் டிப்ளோமா தாரிகளுக்கு நியமனம் வழங்க நடவடிக்கை

by Staff Writer 22-03-2025 | 6:12 PM


Colombo (News1st)தேசிய போதனாவியல் டிப்ளோமா தாரிகளை இலங்கை ஆசிரியர் சேவையில் இணைப்பதற்கான தகவல்களை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.

தேசிய கல்வியற் கல்லூரிகளில் பாடநெறிகளைத் தொடர்ந்த பயிலுனர்களுக்கு நியமனம் வழங்குவதற்கான தகவல்கள் நிகழ்நிலை முறை மூலம் பெறப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்தது.

அதற்கமைய teacher.moe.gov.lk எனும் இணையத்தளத்திற்குள் பிரவேசித்து அதில் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளின் பிரகாரம் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விண்ணப்பங்களை சமர்பிக்க முடியும்