தேசபந்து தென்னகோனுக்கு விசேட பாதுகாப்பு

தேசபந்து தென்னகோனுக்கு விசேட பாதுகாப்பு

by Staff Writer 22-03-2025 | 6:06 PM

Colombo (News1st) விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோனுக்கு விசேட பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்தது.

பொலிஸ் மாஅதிபர் தற்போது பல்லேகல தும்பற சிறைச்சாலையில் பாதுகாப்பு சிறைகூடமொன்றில் தடுத்து வைக்க வைக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்தது.

நீதிமன்ற உத்தரவுக்கமையவே அவருக்கு விசேட பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக திணைக்களம் கூறியது.

பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோனை எதிர்வரும் ஏப்ரல் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் நேற்று முன்தினம் (20)உத்தரவிட்டது.

தேஷபந்து தென்னகோன் உள்ளிட்ட 08 பேரை கைது செய்யுமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் கடந்த மாதம் 28 ஆம் திகதி பிடியாணை பிறப்பித்தது.

2023 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வெலிகமையில் உள்ள ஹோட்டலுக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரியொருவர் உயிரிழந்தார் இதன் காரணமாகவே தேஷபந்து தென்னகோன் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.