லண்டனுக்கான ஶ்ரீலங்கன் விமான சேவைகள் இடைநிறுத்தம்

லண்டனுக்கான ஶ்ரீலங்கன் விமான சேவைகள் இடைநிறுத்தம்

by Staff Writer 21-03-2025 | 7:25 PM

Colombo (News1st) பிரித்தானியாவின் லண்டனிலுள்ள ஹீத்ரோ (Heathrow) விமான நிலையம் நோக்கி புறப்படவிருந்த விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறித்த விமான நிலையத்திற்கு அருகிலுள்ள உபமின் நிலையமொன்றில் ஏற்பட்ட தீப்பரவலினால் ஹீத்ரோ விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதற்கமைய குறித்த விமான நிலையம் திறக்கப்பட்ட பின்னர் மீண்டும் விமான சேவைகள் ஆரம்பிக்கப்படும் என ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் தெரிவித்தது.

ஹீத்ரோ விமான நிலையம் நோக்கி புறப்படவுள்ள விமானங்கள் தொடர்பான மேலதிக விபரங்களை 1979 என்ற துரித இலக்கதிற்கு அழைப்பை ஏற்படுத்தி அறிந்துக் கொள்ள முடியும்