உலக சம்பியன்ஸ்ஷிப் தொடரில் இலங்கை

20 ஆவது முய்தாய் உலக சம்பியன்ஸ்ஷிப் தொடரில் பதக்கங்களை வென்ற இலங்கை வீரர்கள் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்தனர்

by Staff Writer 20-03-2025 | 7:01 PM

Colombo (News1st) 20 ஆவது முய்தாய் உலக சம்பியன்ஸ்ஷிப் (Muaythai Championship) தொடரில் பதக்கங்களை வென்ற இலங்கை வீரர்கள் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்தனர்.

சர்வதேச முய்தாய் சம்மேளனத்தினால் நடத்தப்பட்ட இந்த போட்டித் தொடரில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி 14 வீரர்கள் பங்குபற்றினர்.

போட்டித் தொடரில் இலங்கை 2 தங்கப்பதக்கங்களையும் 03 வௌ்ளிப்பதக்கங்களையும் 02 வெண்கலப்பதக்கங்களையும் சுவீகரித்தது.

10 முதல் 11 வயதுக்கிடைப்பட்ட பிரிவின் 37kg பாரம் தூக்கும் போட்டியில் இலங்கை வீரர் செஹாஸ் அகீச தங்கப்பதக்கம் வென்றார்.

பகிரங்க பிரிவு 54kg பாரம் தூக்கும் போட்டியில் இலங்கை வீரர் தரிந்த தசுன்பிரிய தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.

20ஆவது முய்தாய் உலக சம்பியன்ஸ்ஷிப் தாய்லாந்தின் பாங்கொக்கில் நடைபெற்றதும் இங்கு குறிப்பிடத்தக்கது.