கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண்ணொருவர் கொலை

கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண்ணொருவர் கொலை

by Staff Writer 19-03-2025 | 6:07 PM

Colombo (News1st) புத்தளம் வென்னப்புவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

20 வயதான பெண் ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மாரவில பகுதியைச் சேர்ந்த 21 வயதான இளைஞன் கைது செய்யப்பட்டார்.

இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுவடைந்து மோதலாக தீவிரமடைந்த நிலையில் இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.