12 கோடி பெறுமதியான வௌிநாட்டு சிகரெட்கள் கைப்பற்றல்

12 கோடி ரூபா பெறுமதியான வௌிநாட்டு சிகரெட்கள் கைப்பற்றல்

by Staff Writer 18-03-2025 | 3:50 PM

Colombo (News 1st)  சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட வௌிநாட்டு சிகரெட்கள் சுங்கத் திணைக்களத்தினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுக வளாகத்தில் உள்ள களஞ்சியசாலையொன்றில் மறைத்து ​வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த சிகரெட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் ​பேச்சாளர் சிவலி அருக்கொட தெரிவித்தார்.

ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து பாதுக்க பகுதியில் உள்ள நிறுவனமொன்றுக்கு இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த சிகரெட் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட 713,000 வௌிநாட்டு சிகரெட்களின் பெறுமதி 12 கோடி ரூபாவிற்கும் அதிகமென மதிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த சிகரெட் தொகை இறக்குமதி செய்யப்பட்டமை ஊடாக அரசாங்கத்திற்கு 10 கோடி ரூபாவிற்கும் அதிக தொகை நட்டம் ஏற்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.