.webp)
Colombo (News 1st) மன்னார் விடத்தல்தீவில் இந்தியாவின் அதானி நிறுவனத்துடன் இணைந்து காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தை நிர்மாணிப்பது தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை வலுவற்றதாக்கி உத்தரவிடுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு இன்று(18) மீளப்பெறப்பட்டது.
குறித்த வேலைத்திட்டத்திலிருந்து விலகுவதாக இந்தியாவின் அதானி நிறுவனத்தினால் இலங்கையின் முதலீட்டுச்சபை தலைவருக்கு எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக சட்ட மாஅதிபரால் நகர்த்தல் பத்திரம் ஊடாக உயர் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவித்தலுக்கமைய குறித்த அடிப்படை உரிமை மீறல் மனுவை மனுதாரர்கள் மீளப்பெற்றுள்ளனர்.
சுற்றாடல் நீதிக்கான மையம் உள்ளிட்ட 05 தரப்பினரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.