.webp)
Colombo (News 1st) பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோனின் சொத்துக்களை அடையாளங்காணும் மற்றும் பட்டியலிடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதற்காக சில குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோனை கைது செய்வதற்கான ஒன்றிணைந்த சுற்றிவளைப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பதில் பொலிஸ் மாஅதிபரின் நேரடி கண்காணிப்பில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கைக்கு புலனாய்வு பிரிவின் ஒத்துழைப்பும் பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தேஷபந்து தென்னகோன் கைது செய்யப்படாமல் தலைமறைவாக இருப்பதற்கு உதவுபவர்களும் கைது செய்யப்படவுள்ளனர்.