ட்ரம்பின் தீர்மானத்தால் HIV சிகிச்சை பாதிப்பு

ட்ரம்பின் தீர்மானத்தால் 8 நாடுகளில் HIV சிகிச்சை பாதிப்பு

by Chandrasekaram Chandravadani 18-03-2025 | 4:43 PM

(Colombo 1st) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்  ட்ரம்பின் தீர்மானம் வெளிநாடுகளுக்கான உதவிகளை நிறுத்துவதன் மூலம் 08 நாடுகளில் HIV சிகிச்சைகளுக்கு தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹெய்ட்டி, கென்யா, லெசதோ, தென் சூடான், புர்கினா பாசோ, மாலி, நைஜீரியா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளில் எதிர்வரும் சில மாதங்களில் HIV சிகிச்சைகளுக்கான மருந்துகள் நிறைவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் HIV தடுப்புத் திட்டங்களில் ஏற்படும் இடையூறுகள் 20 ஆண்டு கால முன்னேற்றத்தை இரத்து செய்யக்கூடுமெனவும் அந்த நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால் 10 மில்லியனுக்கும் மேற்பட்ட HIV தொற்றாளர்களுக்கான சிகிச்சைகளுக்கு பாதிப்பு ஏற்படுமெனவும் 03 மில்லியனுக்கும் மேற்பட்ட உயிரிழப்புகளுக்கு வழிவகுக்குமெனவும் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.