ஜோ பைடனின் பிள்ளைகளின் பாதுகாப்பை நீக்கிய ட்ரம்ப்

ஜோ பைடனின் பிள்ளைகளின் பாதுகாப்பை நீக்கிய ட்ரம்ப்

by Staff Writer 18-03-2025 | 11:58 AM

Colombo (News1st) அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனின் (Joe Biden) பிள்ளைகளுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு சேவையை தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) நீக்கியுள்ளார்.

55 வயதான ஹண்டர் பைடன் (Hunter Biden) மற்றும் 43 வயதான ஆஷ்லி பைடன் (Ashley Biden)  ஆகியோர், 30க்கும் மேற்பட்ட இரகசிய சேவை முகவர்களைப் பயன்படுத்தி வந்துள்ளனர்.

இது தொடர்பாக ஊடகவியலாளர்கள் அமெரிக்க ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பியிருந்த நிலையில் சில மணி நேரங்களுக்குள் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

ஹண்டர் பைடன் 18 பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் வெளிநாட்டிற்கான பயணத்தில் ஈடுபட்டமை தமக்கு தெரியாது எனவும் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதாகவும் டொனால்ட் ட்ரம்ப் மேலும் கூறியுள்ளார்.