ஜனாதிபதி - பொலிஸ் உயரதிகாரிகள் சந்திப்பு

ஜனாதிபதி - மேல் மாகாண பொலிஸ் உயரதிகாரிகள் சந்திப்பு

by Staff Writer 18-03-2025 | 3:36 PM

Colombo (News 1st) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் மேல் மாகாண பொலிஸ் உயரதிகாரிகளுக்கு இடையில் இன்று(18) இடம்பெற்ற சந்திப்பொன்று இடம்பெற்றது.

திட்டமிடப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கு தேவையான வசதிகளை வழங்கவும் புதிய சட்டங்களை தயாரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவது பொலிஸ் திணைக்களத்தின் அடிப்படை பொறுப்பாகும் எனவும் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டாமல் இலங்கையில் ஒரு நேர்மையான சமூகத்தை உருவாக்க முடியாது எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.