.webp)
Colombo (News 1st) சிறந்த தமிழ் தொலைக்காட்சிக்கான மக்களின் SLIM-Kantar விருது சக்தி தொலைக்காட்சி வசமானது.
இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட SLIM-Kantar மக்கள் விருது 2025 விழா இன்று(18) கொழும்பில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரபல நடிகர் சனத் குணதிலக பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்தார்.
2025ஆம் ஆண்டிற்கான சிறந்த தமிழ் தொலைக்காட்சிக்கான மக்களின் SLIM-Kantar விருது சக்தி தொலைக்காட்சிக்கு கிடைத்துள்ளது.
ஆண்டின் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி நடிகைக்கான விருது நெத்மி ரொசேல் மற்றும் நயனதாரா விக்ரமஆரச்சி மற்றும் ஆண்டின் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி நடிகருக்கான விருதை சஜித அந்தனி பெற்றுக்கொண்டனர்.