.webp)
Colombo (News 1st) 2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை இன்று(17) ஆரம்பமானது.
பரீட்சை எதிர்வரும் 26ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
நாடளாவிய ரீதியிலுள்ள 3663 பரீட்சை நிலையங்களில் 478,182 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.
இதனிடையே, கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையை முன்னிட்டு விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக 3400 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.