பட்டலந்த அறிக்கை மீதான விவாதம் ஏப்ரல் 10ஆம் திகதி

பட்டலந்த அறிக்கை தொடர்பான பாராளுமன்ற விவாதம் ஏப்ரல் 10ஆம் திகதி

by Staff Writer 16-03-2025 | 2:02 PM

Colombo (News 1st) பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பான பாராளுமன்ற விவாதம் எதிர்வரும் ஏப்ரல் 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

அறிக்கை தொடர்பான விவாதத்திற்காக எதிர்வரும் மே மாதத்தில் தினமொன்றை ஒதுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற விவகாரங்கள் தொடர்பான தெரிவுக்குழு தெரிவித்துள்ளது.

சர்ச்சைக்குரிய பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையானது சபை முதல்வர் பிமல் ரத்நாயக்கவினால் நேற்று முன்தினம்(14) சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளுக்காக குறித்த அறிக்கை சட்ட மாஅதிபருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான நீதியை பெற்றுக்கொடுப்பதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக ஜனாதிபதி குழு நியமிக்கப்படும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.