.webp)
Colombo (News 1st) உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக வேட்புமனுத் தாக்கல் செய்ய எதிர்ப்பார்த்துள்ள அரசியல்க்கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்களுக்கு தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பை விடுத்துள்ளது.
சரியாகவும், முறையாகவும் பூரணப்படுத்தப்பட்ட வேட்புமனுவின் ஒரு பிரதியை மாத்திரம் இணைத்து சமர்ப்பிக்க வேண்டிய ஏனைய அனைத்து ஆவணங்களையும் உரிய காலப்பகுதியில் தங்களின் மாவட்ட தெரிவத்தாச்சி அதிகாரியிடம் ஒப்படைக்குமாறு தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்னாயக்க தெரிவிக்கிறார்.
இளம் வேட்பாளர்களை உறுதிப்படுத்தும் வகையில் மாவட்ட பதிவாளரினால் உறுதிப்படுத்தப்பட்ட பிறப்புச்சான்றிதலின் பிரதியொன்றும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
அவ்வாறில்லாத பட்சத்தில் சமாதானநீதவான் ஒருவரினால் அல்லது சத்தியப்பிரமாண ஆணையாளரால் உறுதிப்படுத்தப்பட்ட சத்தியக்கடதாசி வேட்புமனுவுடன் இணைக்கப்பட்டிருக்கல் வேண்டும்.
2025 உள்ளுராட்சிமன்ற வேட்மனு எற்றுக்கொள்ளும் நடவடிக்கை நாளைமறுதினம் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது,
திங்கட்கிழமை சாதாரணதர பரீட்சை ஆரம்பமாவதன் காரணமாக பரீட்சாத்திகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் வேட்புமனுதாக்கலில் ஈடுபடுமாறு கட்சிகளுக்கும் சுயேச்சைக் குழுக்களுக்கும் தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்,ஏ.எல் ரத்னாயக்க குறிப்பிட்டார்.