.webp)
Colombo (News 1st) SEA OF SRILANKA எனப்படும் இலங்கைக் கடற்பரப்பிலுள்ள கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா இன்று இனிதே நிறைவுற்றது.
கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று(14) பிற்பகல் ஆரம்பமானது.
கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த திருவிழாவில் சிவகங்கை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை லூர்த்து ஆனந்தம் ஆண்டகை, யாழ். மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் அடிகளார் ஆகியோர் தலைமையில் இன்று(15) காலை 6.30க்கு திருவிழா சிறப்புத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தமிழகத்தில் இருந்தும் வருகைதந்திருந்த மக்கள் இதில் பங்கேற்றிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கப்பட்டது.