.webp)
Colombo (News 1st) பாகிஸ்தான் பலூசிஸ்தான்(Balochistan) மாகாணத்தில் ஆயுதக்குழுவின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட ரயிலிலிருந்து 300-இற்கும் அதிக பயணிகள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த மீட்பு நடவடிக்கையின் போது 33 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் நேற்று முன்தினம்(11) பயணிகள் ரயிலொன்று கிளர்ச்சிக்குழுவின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.
ரயிலிலிருந்த 440 பயணிகள் கிளர்ச்சிக்குழுவினரால் பணயக்கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.