Adani Green Energy நிறுவனத்தின் அறிவிப்பு

மன்னார் காற்றாலை மின்திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச்செல்ல Adani Green Energy நிறுவனம் இணக்கம்

by Staff Writer 11-03-2025 | 9:40 PM

Colombo (News 1st) மன்னாரில் 484 மெகாவாட் காற்றாலை மின்திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல எண்ணியுள்ளதாக இலங்கைக்கான Adani Green Energy  நிறுவனத்தால் எரிசக்தி அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிநவீன தொழில்நுட்பத்தின் ஊடாக இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்காக அதனுடன் தொடர்புடைய பரிமாற்ற கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் தாம் எதிர்பார்த்துள்ளதாக Adani Green Energy நிறுவனம் தெரிவித்துள்ளது.

2 வருடங்களுக்கும் மேலாக இடம்பெற்ற கலந்துரையாடல்களை அடுத்து, புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான விலைகளும் அங்கீகரிக்கப்பட்டதாக நிறுவனம் கூறியுள்ளது.