.webp)
COLOMBO (News 1st) நாவுல- எலஹெர வீதியில் அலிகந்த பகுதியில் காரொன்று யோத வாவியில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர்.
அத்துடன், பெண்ணொருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாவுல பகுதியிலிருந்து எலஹெர நோக்கி நேற்றிரவு (10)பயணித்த கார் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காரின் சாரதியும், பெண்ணொருவரும் உயிரிழந்ததுடன், அவர்கள் கடுகஸ்தோட்டை, நாவலப்பிட்டி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
விபத்து தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.