ஹசீஸ் போதைப்பொருளுடன் கனேடிய பெண்ணொருவர் கைது

ஹசீஸ் போதைப்பொருளுடன் கனேடிய பெண்ணொருவர் கைது

by Staff Writer 10-03-2025 | 1:25 PM

Colombo (News 1st) 17 .5 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான ஹசீஸ் போதைப்பொருளுடன் கனேடிய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் அடங்கிய பொதியுடன் குறித்த பெண் கனடாவின் டொறண்டோவிலிருந்து EY-396 விமானத்தின் ஊடாக இலங்கைக்கு  நேற்றிரவு வருகை தந்துள்ளார்.

பயணப்பையில் மறைத்து வைத்து போதைப்பொருளை அவர் இலங்கைக்கு கொண்டுவந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

20 வயதான கனேடியப் பெண்ணே கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது சந்தேக நபரிடமிருந்து 17 கிலோகிராம் 573 கிராம் ஹசீஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

விமான நிலைய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளினால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. 

ஏனைய செய்திகள்