தேஷபந்து தென்னகோனை கைது செய்வதற்காக 06 பொலிஸ் குழு

முன்னாள் பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோனை கைது செய்வதற்காக 06 பொலிஸ் குழுக்கள்

by Staff Writer 10-03-2025 | 12:32 PM

COLOMBO (News 1st)  முன்னாள் பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோனை கைது செய்வதற்காக 06 பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ச்சியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி மாத்தறை பெலேன பகுதியிலுள்ள ஹோட்டலொன்றுக்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைய முன்னாள் பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோனை கைது செய்யுமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேஷபந்து தென்னகோனுக்கு வௌிநாட்டு பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நீதிமன்றத்தில் பிடியானை பிறப்பிக்கப்பட்டு,  ஆஜராகாமல்  தவிர்ப்பவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பொது மக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல நேற்று தெரிவித்தார்.

சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது தராதரம் தொடர்பில் கவனத்திற்கொள்ளப்பட மாட்டாது எனவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார். 

ஏனைய செய்திகள்