.webp)
Colombo (News 1st) திவுலப்பிட்டி - நால்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 9 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் 3 பாடசாலை மாணவர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கிரிஉல்ல பகுதியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ், கொழும்பில் இருந்து கிரிஉல்ல நோக்கி பயணித்த ட்ரக்குடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்திற்குள்ளான குறித்த பஸ் வீதியை விட்டு விலகி அருகிலிருந்த ஓடைக்குள் கவிழ்ந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.