.webp)
Colombo (News 1st) காசாவிற்கான முழுமையாக மின் விநியோகத்தை இடை நிறுத்துவதற்கு இஸ்ரேல் தீர்மானித்துள்ளது.
ஹமாஸினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுதலை செய்வதற்கு அழுத்தங்களை பிரயோகிக்கும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பணயக்கைதிகளை மீள அழைத்து வருவதற்ககான அனைத்துவிதமான முறைகளையும் கையாளவுள்ளதாக இஸ்ரேலிய எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஒரு வாரத்திற்கு முன்னர் காசாவிற்கான அனைத்து நிவாரண உதவிகளையும் இஸ்ரேல் இடைநிறுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.