.webp)
Colombo (News 1st) அமெரிக்காவுடனான எந்த வகையான போருக்கும் தாம் தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவால் சீனா மீது விதிக்கப்பட்டுள்ள வர்த்தகக் கட்டுப்பாடுகளுக்கும் வரி விதிப்புகளுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வரிவிதிப்பு மூலமாகவோ வர்த்தக போர் மூலமாகவோ அல்லது எவ்வித போர் மூலமாகவோ அதற்காக எதிராக இறுதி வரை போராட தாம் தயாராகவுள்ளதாக அமெரிக்காவின் வொஷிங்டனிலுள்ள சீன தூதுரகம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் சீனாவும் அமெரிக்க இறக்குமதிகளுக்கு 10 முதல் 15 வீத வரி விதிப்பதாக நேற்று அறிவித்தது.
இதனிடையே, சீனாவில் 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் பாதுகாப்பு செலவினங்களுக்கான நிதியை 7.2 வீதமாக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.