3 அரசியல் கட்சிகள் கட்டுப்பணம் செலுத்தின

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக 3 அரசியல் கட்சிகள் கட்டுப்பணம் செலுத்தின - தேர்தல் ஆணைக்குழு

by Staff Writer 05-03-2025 | 2:29 PM

Colombo (News 1st) உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக அங்கீகரிக்கப்பட்ட 3 அரசியல் கட்சிகளால் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் 19 சுயேட்சைக் குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கண்டி, கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை நேற்று முன்தினம்(03) முதல் ஆரம்பமாகின.

எதிர்வரும் 19ஆம் திகதி வரை கட்டுப்பணம் ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

எனினும், எதிர்வரும் 8, 9, 13, 15, 16ஆம் திகதிகளில் கட்டுப்பணங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.