.webp)
Colombo (News 1st) வத்தளை யில் திருடப்பட்டு தப்பிச்செல்ல முற்பட்ட லொறி மீது கடுவலயில் பொலிஸாரால் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வத்தளையில் நிறுத்தப்பட்டிருந்த மரக்கறி ஏற்றிய லொறியைத் திருடி ஒருகொடவத்தை பகுதிக்கு கொண்டுசெல்வதாக தகவல் கிடைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதற்கமைய மோட்டார் சைக்கிள் அணியினரை ஈடுபடுத்தி இன்று அதிகாலை மேற்கொண்ட தேடுதலின் போது கடுவலயில் இருந்து மாலபே நோக்கி கட்டளையை மீறி பயணித்த லொறி மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
துப்பாக்கிச்சூட்டினால் லொறியின் டயர்களுக்கு சேதமேற்பட்டுள்ளதுடன், லொறியைக் கைவிட்டு தப்பிச்செல்ல முற்பட்ட சந்தேகநபரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.