.webp)
Colombo (News 1st) வாகன இறக்குமதி தடை நீக்கப்பட்டதை அடுத்து ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் முதல் தொகுதி வாகனங்கள் இன்று(27) நாட்டை வந்தடையவுள்ளன.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையவுள்ள கப்பலில் 300 வாகனங்கள் காணப்படுவதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானேகே தெரிவித்தார்.
குறித்த வாகனங்களை முன்பதிவு செய்தவர்களுக்கு அவற்றை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.
5 வருடங்களுக்கு பின்னர் ஜப்பானிலிருந்து வாகனங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, தாய்லாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கெப் ரக வாகனங்கள் தற்போது நாட்டை வந்தடைந்துள்ளள.
3000-இற்கும் மேற்பட்ட வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானேகே தெரிவித்தார்.