குஷ் போதைப்பொருளுடன் பெண் கைது

12 மில்லியன் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் பெண் கைது

by Staff Writer 26-02-2025 | 3:16 PM

Colombo (News 1st) குஷ் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

38 வயதான குறித்த பெண் தாய்லாந்திலிருந்து ஹொங்கொங் ஊடாக இன்று(26) அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளார்.

அவர் தமது பயணப்பைக்குள் ஒரு கிலோ 200 கிராம் போதைப்பொருளை மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து கொண்டுவந்துள்ளதாக சுங்கம் தெரிவித்தது.

கைப்பற்றப்பட்ட குஷ் போதைப்பொருளின் பெறுமதி 12 மில்லியன் ரூபாவாகும்.

சந்தேகநபரான பெண் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.