பாதுகாப்பு செயலாளரின் அதிரடி உத்தரவு

முப்படையிலிருந்து தப்பிச்சென்ற அனைவரையும் கைது செய்ய உத்தரவு

by Staff Writer 24-02-2025 | 3:06 PM

Colombo (News 1st) முப்படையில் இருந்து தப்பிச்சென்றுள்ள அனைத்து உறுப்பினர்களையும் கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு செயலாளர் எயார்வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தாவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், முன்னறிவிப்பின்றி முப்படையில் இருந்து தப்பிச்சென்றுள்ள அனைவரையும் கைது செய்யுமாறு முப்படைகளின் பிரதானிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.