.webp)
Colombo (News 1st) ஜனாதிபதி தமது ஊடக செயற்பாடுகளுக்காக 3 புதிய நியமனங்களை இன்று(24) வழங்கினார்.
அதனடிப்படையில், ஜனாதிபதி ஊடகப்பிரிவின் பணிப்பாளர் நாயகமாக பிரசன்ன பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை ஜனாதிபதி ஊடகப்பிரிவின் ஆலோசகராக சந்தன சூரியபண்டார மற்றும் சர்வதேச ஊடக, தொடர்பாடல் பணிப்பாளராக அனுருத்த லொகுஹபு ஆரச்சி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.