.webp)
Colombo (News 1st) எல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹல்பே பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பெண் உயிரிழந்துள்ளதுடன் மற்றுொருவர் காயமடைந்துள்ளார்.
குறித்த பெண் தனது மகளுடன் வீதியருகே நின்றுகொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியின் அருகே நின்றுகொண்டிருந்தவர்கள் மீது மோதியுள்ளது.
இதன்போது 49 வயதுடைய பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.