மீளாய்வின் பின் எதிர்க்கட்சி MPகளுக்கு பாதுகாப்பு

மீளாய்வின் பின்னர் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

by Staff Writer 23-02-2025 | 4:18 PM

Colombo (News 1st) எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்படும் என  பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

வழங்கப்பட வேண்டிய பாதுகாப்பு தொடர்பில் பாதுகாப்பு மீளாய்வின் பின்னர் தீர்மானிக்கப்படும் என அவர் கூறினார்.

தமது பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களால் அரசாங்கம் மீது அண்மை காலமாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

எதிர்க்கட்சியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் போதுமானளவு பாதுகாப்பை வழங்குமாறு எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவால் சபாநாயகருக்கு எழுத்துமுலம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

எவ்வாறாயினும் ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அவ்வாறான பாதுகாப்பு வழங்கப்படாதென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அறிவித்துள்ளார்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Update: எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது தொடர்பில் இதுவரை தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்தார்.

இதனிடையே, பாதுகாப்பு தொடர்பில் நிலவும் அச்சுறுத்தல் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பாதுகாப்பு கோரிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மீளாய்வின் பின்னர் தேவையேற்பட்டால் மாத்திரம் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.