.webp)
Colombo (News 1st) அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்த மற்றும் அரிசியை மறைத்துவைத்திருந்த குற்றச்சாட்டில் 39 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபையினரால் நேற்று(22) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கேகாலை, கம்பஹா மாவட்டங்களில் இந்த சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.