ஹைட்ரோ தொழில்நுட்பத்தில் மின் உற்பத்தி

ஹைட்ரோ தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி மின் உற்பத்தியை மேற்கொள்ள தீர்மானம்

by Staff Writer 21-02-2025 | 7:20 PM

Colombo (News 1st) நாட்டில் ஹைட்ரோ தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது.

அதற்கமைய மகாஓயாவின் அரநாயக்க, நாவலப்பிட்டி பகுதிகளில் 2 நீர்த்தேக்கங்கள் கட்டப்பட்டு 2.5 கிலோமீற்றர் நீளமான சுரங்கப்பாதை ஊடாக இணைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

பகலில் சூரிய சக்தி, காற்றாலை சக்தியைப் பயன்படுத்தி நீர்த்தேக்கத்திலிருந்து நீருக்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு இரவு நேரத்தில் நீர்த்தேக்கத்திலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்வதன் ஊடாக மின்சாரத்தை விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் தம்மிக விமலரத்ன தெரிவித்தார்.

இந்தத் திட்டத்தின் ஊடாக 600 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுவதுடன் இதற்கு 450 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் எரிசக்தி உற்பத்தியில் இது ஒரு புதிய மைல்கல் எனவும்  இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

2030 ஆம் ஆண்டளவில் நாட்டின் 70 சதவீத மின்சாரத்தை புதுப்பிக்கத்தக்க எரிசக்தியிலிருந்து உற்பத்தி செய்யும் அரசாங்கத்தின் இலக்கை அடைய இது உதவும் என மின்சார சபை நம்பிக்கை வௌியிட்டுள்ளது.