.webp)
Colombo (News 1st) மகா சிவராத்திரியை முன்னிட்டு வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 27 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
அன்றைய நாளுக்குரிய கல்வி செயற்பாடுகளை மார்ச் முதலாம் திகதி சனிக்கிழமையன்று முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், கிழக்கு மாகாணத்திலுள்ள சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகள் 27 ஆம் திகதி வழமை போன்று இடம்பெறும் என கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.