கொழும்பு துறைமுக மேற்கு முனைய செயற்பாடுகள்

கொழும்பு துறைமுக மேற்கு முனையத்தின் செயற்பாடுகள் அடுத்த வாரம் ஆரம்பம்

by Staff Writer 21-02-2025 | 7:09 PM

Colombo (News 1st) கொழும்பு துறைமுக மேற்கு முனையத்தின் செயற்பாடுகளை எதிர்வரும் 26 ஆம் திகதியளவில் ஆரம்பிக்கவுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவிக்கின்றது.

குறித்த முனையத்திற்கு கொள்கலன்களை ஏற்றிய கப்பலொன்று வருகை தரவுள்ளதாக பிரதியமைச்சர் ருவன் கொடித்துவக்கு கூறினார்.

அதானி நிறுவனத்தினால் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மேற்கு முனையத்தினூடாக வருடாந்தம் 2 தசம் 7 மில்லியன் கொள்கலன்களை இயக்க முடியுமென பிரதியமைச்சர் தெரிவித்தார்.

இதனிடையே கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் செயற்பாடுகளை எதிர்வரும் ஜூலை மாதம் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

துறைமுக அதிகார சபையின் நிதியை பயன்படுத்தி நிர்மாணிக்கப்பட்ட கிழக்கு முனையத்தின் வருடாந்த நடவடிக்கை கொள்ளளவு 3 மில்லியனாகும்.