.webp)
Colombo (News 1st) கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய பெண்ணை கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.
குறித்த பெண் தொடர்பான தகவல்களை வழங்கும் நபருக்கு பணப்பரிசில் வழங்கப்படுமென பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
071 8591727 மற்றும் 071 8591735 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி தகவல்களை பெற்றுக்கொடுக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.