.webp)
Colombo (News 1st) கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு புதுக்கடை நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் ஐந்தாம் இலக்க நீதவான் நீதிமன்றத்திற்குள் நேற்று(19) காலை இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் கணேமுல்லே சஞ்சீவ என்றழைக்கப்படுகின்ற சஞ்சீவ குமார சமரரத்ன என்பவர் உயிரிழந்தார்.
இதன் பிரதான சந்தேகநபர் கொலை சம்பவம் இடம்பெற்று சில மணித்தியாலங்களுக்குள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டார்.
இதனிடையே, கொலைச் சம்பவத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய மற்றுமொரு பெண்ணை கைது செய்வதற்கான பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.