.webp)
Colombo (News 1st) உலகின் 50 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் புத்தாக்க சர்வதேச மாநாடு கொழும்பில் நாளையும்(20) நாளை மறுதினமும்(21) நடைபெறவுள்ளது.
Innovation Island Summit Sri Lanka 2025 என இதற்கு பெயரிடப்பட்டுள்ளது.
இந்த விசேட மாநாட்டிற்கு Observer ஆய்வு நிறுவனம், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் மற்றும் கெப்பிட்டல் மகாராஜா குழுமம் ஆகியன தலைமை தாங்குகின்றன.
இலங்கையை புத்தாக்கத்திற்கான உலகளாவிய கேந்திர நிலையமாக மாற்றும் நோக்கத்துடன் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
50 நாடுகளின் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சிரேஷ்ட அரச அதிகாரிகள் மற்றும் வெவ்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் விசேட நிபுணர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர்.