.webp)
Colombo (News 1st) இலங்கையின் முன்னணி இசை ஆளுமையும் ஊடக ஜாம்பவானுமான 'கலாசூரி', 'தேச நேத்ரு' கலாநிதி அருந்ததி ஸ்ரீரங்கநாதன் இன்று(17) அவுஸ்திரேலியாவில் காலமானார்.
அருந்ததி ஸ்ரீரங்கநாதன் பாடகி, சிறந்த ஒலிபரப்பாளர், வீணை ஆசிரியர், நடன நிகழ்ச்சிகளின் ஒழுங்கமைப்பாளர் என பன்முகத் திறமைகளை கொண்டவர்.
அன்னார் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன தமிழ் சேவைப்பிரிவின் பணிப்பாளராகவும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் இசை, கர்நாடக சங்கீதம், நாட்டியம் ஆகிய கலைகளை கற்பிக்கும் விரிவுரையாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
அன்னாரின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் வௌியிட்டு வருகின்றனர்.