ஹஷீஸ் போதைப்பொருளுடன் கனேடிய பெண் கைது

ஹஷீஸ் போதைப்பொருளுடன் கனேடிய பெண் கைது

by Staff Writer 16-02-2025 | 2:29 PM

Colombo (News 1st) 36 கிலோ 152 கிராம் ஹஷீஸ் போதைப்பொருளுடன் கனேடிய பெண்ணொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கனடாவின் டொரன்டோ நகரிலிருந்து ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சென்ற குறித்த பெண் அங்கிருந்து அபுதாபி விமானம் ஊடாக இலங்கையை வந்தடைந்துள்ளார்.

சர்வதேச புலனாய்வு தகவலுக்கு அமைவாக விமான நிலையத்தில் அவர் கைது செய்யப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த கனேடிய பெண் தனது பயணப்பையில் வைத்திருந்த ஆடைகளுக்குள் மறைத்துவைத்து போதைப்பொருளை கொண்டுவந்துள்ளார்.

36 வயதான கனேடிய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.