![sample image](https://cdn.newsfirst.lk/assets/NEWS-LOGO-Recovered%20(1).webp)
Colombo (News 1st) டெல்லி ரயில்வே நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 18 பேர் உயிரிழந்துள்ளதுடன் குறைந்தது 10 பேர் காணமடைந்துள்ளதாக சர்வசே ஊடகம் செய்தி வௌியிட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய ஆன்மீக திருவிழாவான மகா கும்பமேளாவில் கலந்துகொள்ளும் நோக்கில் டெல்லி ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்தவர்களிடையே இவ்வாறு சனநெரிசல் ஏற்பட்டுள்ளது.
முன்பதிவு செய்யப்படாத ரயில் டிக்கெட்கள் விற்பனை செய்யப்பட்டமை மற்றும் ரயில்களின் தாமதம் என்பன பயணிகளிடையே நெரிசல் ஏற்பட்டமைக்கான காரணமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.