![sample image](https://cdn.newsfirst.lk/assets/NEWS-LOGO-Recovered%20(1).webp)
Colombo (News 1st) 3 மாகாணங்களில் கல்விப் பணிப்பாளர் பதவிகள் வெற்றிடமாக உள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மேற்கு, கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் இந்தப் பதவி வெற்றிடமாக இருப்பதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இலங்கை கல்வி நிர்வாக சேவையின் தரம் 1 இல் 5 வருடங்களுக்குக் குறையாத திருப்திகரமான சேவைக் காலத்தைக் கொண்ட மற்றும் அனைத்து தகைமைகளையும் கொண்ட நபர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்தப் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் அடுத்த மாதம் 3 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.